Wednesday, August 3, 2011

ஜெய தேவா - கீதா கோவிந்தம் - 3 part 1

அழகான கண்ணன்

ராதையின்
காதலில் அன்பில்
கட்டுண்ட
கண்ணன்
மற்ற கோபியரை
மறந்திட்டு
வாழ
விழைந்தான்.


காமனின்
கணைகளிலிருந்து தனைக்
காக்க ஒண்ணாது,
தேவையின்றி ராதையைத்
துறந்ததை மறந்ததை எண்ணி
வருந்தினான் கண்ணன்.
ராதையை
முன்னும் பின்னும்
இங்கும் அங்கும்
தேடி அலைந்தான்.
எங்கும் தேடியும்
எதுவும் புலப்படாது
யமுனையின் கரையில்
மயங்கி விழுந்தான்.

சிவன் அன்று
உருவமில்லாது
உனைச் சிதைத்தான், அதற்குப்
பலி வாங்க இன்றென்
பின்னே அலைகிறாயோ காம தேவா ?
என் காதலி
என்னருகில்லை.
என் கழுத்திலிருக்கும் இந்த மாலை
பரமன் கழுத்திலிருக்கும்
பாம்பு என்று நினைத்தாயோ ?
நீலத் தாமரையாலான இந்த மணி
பரமன் கழுத்திலிருக்கும்
விடம் என்று நினைத்தாயோ ?
காய்ந்த சந்தனம் என் உடலிலிருப்பது;
சிவனின் உடலில் இருக்கும்
சாம்பலன்று;
ஏனென்னைச் சோதிக்கிறாய் ?

என்று ராதை
எனை விட்டு விலகினாலோ
என் உயிர் அன்றே
எனை விட்டு விலகியது;
ஏற்கனவே இறந்த
என்னை ஏன் நீ அம்பு
எய்திக் கொல்ல
எண்ணுகிறாய் ?

No comments:

Post a Comment