இன்றுமுற்றும் முதுகுநோவ
இருந்திழைத்தஇச் சிற்றிலை,
நன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும்
ஆர்வந்தன்னைத் தணிகிடாய்,
அன்றுபாலக னாகியாலிலை
மேல்துயின்ற எம்மாதியாய்,
என்றுமுன்றனக் கெங்கள்மேலிரக்
கம்எழாததெம் பாவமே
நாராயணா,
நாள் முழுவதும்
நாங்கள் குனிந்து முதுகு
வலிக்க இச்சிறு
வீடுகள்
கட்டுகின்றோம்; அங்ஙனம்
கஷ்டப்பட்டு
கட்டிய வீட்டை எங்களைக்
காண, ரசிக்க விடு;
கட்டி முடிக்கும்முன்
கலைக்காதே;
குழந்தையாய் நீ ஆலிலையில்
கண்ணுறங்கும் போதே உன்னைக்
கண்டு உன்மேல் அன்பு
கொண்டு
எப்பொழுதும் உன்னையே
எண்ணி இருப்பவர்கள் நாங்கள்;
எங்கள் மேல் இறக்கம் கொள்ளாது
எங்களுக்கு அருள் செய்யாதிருக்க
என்ன பாவம் செய்தோமோ நாங்கள்.
No comments:
Post a Comment