Monday, August 29, 2011

நாச்சியார் திருமொழி - பாசுரம் 2.4

பெய்யுமாமுகில் போல்வண்ணா ! உன்றன்
   பேச்சும்செய்கையும், எங்களை
மையலேற்றி மயக்கவுன்முகம்
   மாயமந்திரந் தான்கொலோ,
நொய்யர்பிள்ளைக ளென்பதற்குன்னை
   நோவநாங்க ளுரைக்கிலோம்,
செய்யதாமரைக் கண்ணினாயெங்கள்
   சிற்றில்வந்து சிதையேலே


மழை தரும் கருத்த
முகிலின் நிறமொத்த
மாதவா, உன் பேச்சு,
மலர்ந்த தாமரை போன்றுன்
முகம் எல்லாம் எங்களை
மயக்கி
மகிழ்வித்தாலும்
உன் செயல் எங்களை
வருந்தவைக்கிறது; இருந்தும்
வானளந்த உத்தமா உன்
உள்ளம் வருந்த ஒரு
வார்த்தை கூட நாங்கள்
உரைக்க மாட்டோம்;
சிரீதரா, மண்ணாலான எங்கள்
சிறிய வீடுகளை வந்து
சேதப்படுத்தாதே;

No comments:

Post a Comment