வானிடை வாழுமவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி,
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப,
ஊனிடை யாழி சங் குத்தமர்க்கென்று
உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்,
மானிட வர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில் லேன்கண்டாய் மன்மதனே
தேவர்களுக்கென வேள்வியில்
தரப்பட்ட
திருப் பிரசாதம் காட்டில்
திரியும் நரி மோந்து, வாய் வைத்துத்
தின்பது ஏற்புடையதல்ல; அதுபோலே
உலகளந்த உத்தமன் ஒருவனுக்கே என்
உடல் உயிர் எல்லாம்; அதைவிடுத்து
வேறோர் மனிதனுக்கும் எனக்கும்
விவாகம் என்ற பேச்சு எழுந்தால் அவ்
வினாடியே உயிர்விடுவேன்,
மன்மதனே;
No comments:
Post a Comment