Sunday, August 21, 2011

நாச்சியார் திருமொழி - பாசுரம் 1.7

காயுடை நெல்லோடு கரும்பமைத்துக்
கட்டி யரிசி யவலமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால்
மன்மதனே ! உன்னை வணங்குகின்றேன்
தேசமுன் னளந்தவன் திருவிக்கிரமன்
திருக்கைகளா லென்னைத் தீண்டும்வண்ணம்
சாயுடை வயிறுமென் தடமுலையும்
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே


நெல் கரும்பு
வெல்லம்
அரிசி
அவல்
எல்லாம் உனக்கு நான்
படைத்திருக்கிறேன்;
உனக்குப் பிடித்த மந்திரம் சொல்லி
உன்னை வணங்குகிறேன்,
மன்மதா !
மூன்று உலகையும்
மூவடிகளால் அளந்த அந்த
உத்தமன் தன்
திருக்கரங்களால் எனைத்
தொட்டணைக்க,
அவனுக்காகவே
அவனியில் பிறந்த நான்
ஆனந்தப்பட,
அழியாப் புகழ் பெற்றே
நான்
நிலைத்திருக்கும்படி என்னை ஆசிர்வதி;

No comments:

Post a Comment