மத்தநன் னறுமலர் முருக்கமலர்
கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கித்
தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து
வாசகத் தழித்துன்னை வைதிடாமே,
கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு,
கோவிந்தா னென்பதோர் பேரெழுதி
வித்தகன் வேங்கட வாணனென்னும்
விளக்கினிற் புகவென்னை விதிக்கிற்றியே
காமதேவா, உன்
திருப் பாதக்கமலங்களை
தினம் மூன்று முறை
தொழுது,
வெள்ளை மலர் கொண்டு
வணங்கி,
உனை
வழிபடுவேன்;
என் இறைவனோடு
எனை இணைத்திடுவாய்;
மன்மதன் தன்
மந்திரக் கணையால் காதலர் எல்லாரையும்
இணைத்திடுவான் என்றே புகழ் பெற்றவன் நீ;
இப் புகழை
இழக்காது நீ தக்க வைத்துக்கொள்;
மலரும் மலர்களைக் கொண்டு
ஓர் அம்பு செய்து
கோவிந்தனின் பெயர் சொல்லிப் பிரார்த்தித்து
என்னை அந்த ஒளி வெள்ளத்தோடு
இணையுமாறு
எய்திடு;
No comments:
Post a Comment