Thursday, August 11, 2011

வெங்கடேச சுப்ரபாதம் - 4

13. Sreemannabheeshta varadhakhila lookabandho
Sree Sreenivasa Jagadekadayaika sindho
Sree devathagruha bhujanthara divyamurthe
Sree Venkatachalapathe! thava suprabhatham

எல்லாரும் வாழ்வில் உய்ய
எங்களுக்கென
எழுந்தருளியிருப்பவனே,
தன் நெஞ்சில்
தன் துணையாளைக் கொண்டு
தரணி துயர்
துடைப்பவனே,
திரு
மலையையே தன்
மனையாகக் கொண்டவனே,
வேங்கடநாதா
விழித்தெழுவாய் !!!

14. Sree swamy pushkarinikaplava nirmalangaa
Sreyorthino hara viranchi sanadadhyaha
Dware vasanthi varavethra hathothamangaha:
Sree Venkatachalapathe! thava suprabhatham


பிரம்மனும் சனந்தனும்
புஷ்கரணி எனும்
புண்ணிய தீர்த்தத்தில்
உடல் நனைத்து
உலக நலனுக்காக
உன்னை பூஜிக்க
வாசல் வந்துக் காத்திருக்கின்றனர்;
இவர்களையும் மற்ற எல்லாரையும்
இன்புற்றிருக்க அருள் செய்வாய்,
விழித்தெழுவாய்,
வேங்கட மலை வாழ்
வெங்கடேசா !!!

15. Sree seshasaila garudachala venkatadri
Narayanadri vrishabhadri vrishadri mukhyam
Akhyam thvadeeyavasathe ranisam vadanthi
Sree Venkatachalapathe! thava suprabhatham

ஸ்ரீ சேசசைலம்
கருடாச்சலம்,
நாராயண மலை,
விருஷ மலை
எனப்
பல்வேறு நாமங்களில்
அழைக்கப்படும்
வேங்கட மலை வாழ்
வெங்கடேசா,
உனை தரிசிக்க
தேவர்கள் எல்லோரும்
திரண்டிருக்கின்றனர்;
திருமலை வாழ்
திருமாலே,
கண் திறந்து எல்லோரையும்
காண்பாய்.

16. Sevaaparaashiva suresa krusanudharma
Rakshombhunatha pavamana dhanadhi nathaha:
Bhaddanjali pravilasannija seersha deSaha:
Sree Venkatachalapathe! thava suprabhatham

இந்திரன்,
அக்னி,
வருணன்,
நைருதி,
வாயு,
குபேரன் மற்றெல்லா
கடவுளும்
தன் தலை மேல் கைகுவித்து உன்
தரிசனத்திற்காகவும், உன்
ஆணைக்காகவும்
காத்திருக்கின்றனர்;
கண் திறந்து, எல்லாரும்
கண்டு இன்புற
அருள் செய்வாய்.

No comments:

Post a Comment