உருவுடை யாரினை யார்கள் நல்லார்
ஒத்து வல்லார்களைக் கொண்டு, வைகல்
தெருவிடை யெதிர்கொண்டு பங்குனி நாள்
திருந்தவே நோற்கின்றேன் காமதேவா,
கருவுடை முகில்வண்ணன், காயாவண்ணன்
கருவினை போல்வண்ணன், கமலவண்ணத்
திருவுடை முகத்தினில் திருக்கண்களால்
திருந்தவே நோக்கெனக் கருளுகண்டாய்.
காமதேவா,
ஏதும் அறியாக் கன்னி நான்;
என் பூஜையில்
ஏதாவது தவறு நேர்ந்ததோ ?
ஏன் கண்ணன் இன்னும்
எனக்கு அருளவில்லை ?
காம சாஸ்திரங்களை
கசடற அறிந்தவர்களோடு
கலந்தாலோசித்து
என் வழிமுறையில்
ஏதேனும் குறை இருப்பின் களைந்து
பங்குனியில் உத்திராட நட்சத்திரத்தில்
மீண்டும் விரதமிருப்பேன்; அவ் விரதமேற்று
என் எண்ணப்படி
என்னை அந்த அழகான,
கார்மேக வண்ணன்,
காயாம்பூ நிறம் ஒத்தவன்,
தாமரை போன்று கண்கள் கொண்ட அந்தக்
கண்ணன்
கண் திறந்துக்
காண,
ஆசிர்வதிக்க நீ
அருள வேண்டும்;
No comments:
Post a Comment