Friday, August 26, 2011

நாச்சியார் திருமொழி - பாசுரம் 2.1

நாமமாயிர மேத்த நின்ற
நாராயணாநர னேஉன்னை,
மாமிதன் மகனாகப்பெற்றா
லெமக்கு வாதை தவிருமே,
காமன்போதரு காலமென் றுபங்
குனிநாள்கடை பாரித்தோம்,
தீமை செய்யும் சிரீதரா!எங்கள்
சிற்றில்வந்து சிதையேலே



ஆயிரம் பெயர் கொண்டஆனந்த நாராயணனே,
மானுடனாய், எங்கள்
மாமியின்
மகனாய் இம்
மண்ணில் பிறந்தவனே, உன்
மாயை விளையாட்டுக்களிலிருந்து
தப்பிக்க முடியாது
தவிக்கிறோம் நாங்கள்;
மன்மதன் தன்னை
மகிழ்விக்கும்
மக்களுக்கு உதவும்
மாதம் என்பதால், அவனை
வேண்டி நாங்கள் இந்த
வண்ண வண்ண
வீடுகளை
வரைந்து
வழிபடுகிறோம்; எங்கள்
வேண்டுதலுக்கு இடையூறு
செய்யும் சிரீதரா, எங்கள்
சிறு வீடுகளைச்
சேதம்
செய்யாதே;

No comments:

Post a Comment