தொழுதுமுப் போதுமுன் னடிவணங்கித்
தூமலர் தூய்த்தொழு தேத்துகின்றேன்,
பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே
பணிசெய்து வாழப் பெறாவிடில்நான்,
அழுதழு தலமந்தம் மாவழங்க
ஆற்றவு மதுவுனக் குறைக்குங்கண்டாய்,
உழுவதோ ரெருந்தினை நுகங்கொடுபாய்ந்து
ஊட்டமின் றித்துரந் தாலொக்குமே.
தினம் மூன்று முறை
தூய மலர் வைத்துத்
துதிக்கின்றேன்
உன்னை;
உன் பெயர் சொல்லி
வணங்குகின்றேன்;
கடல் வண்ணன் அந்தக்
கண்ணனையே நான்
கணவனாகப் பெறாவிடில்
கரைந்து கலங்கி
காம தேவ எனக்கு
உதவாத
உன்மேல்
வருந்த நேரிடும்;
அது உண்ண உணவு
அருந்த நீர் ஏதும் தராது
அடித்தே காளை மாட்டைக் கொல்வது
அதுபோலாகும்;
அவ்வாறு
ஏதும் நேராது, பலி
ஏதும் உன்மேல் வராது,
என் கண்ணனிடம்
என்னைச் சேர்க்க
ஏது செய்வாய்;
No comments:
Post a Comment