Monday, August 1, 2011

ஜெயதேவா - கீதா கோவிந்தம் - 1

குதூகலத்தில் கண்ணன்

ராதே,
கருமேகம் திரள்கிறது;
அடர்ந்து வளர்ந்த மரங்கள்
அதிகப்படுத்துகிறது
இருளை;
இரவும் வெகு தூரத்திலில்லை;
முன் நீ செல்ல
முகில்வண்ணன் பின் தொடர
முதலில் வீட்டுக்குச் செல்லுங்கள்;
நந்தா இப்படிச் சொன்னதும்
நாராயணன் கண்ணனும்
ராதையும்
வீடு நோக்கி
விரைந்தார்கள்;
இதைத் தொடர்ந்து
ஒவ்வொரு மரங்களிடமும்
நடைபாதை முழுவதிலும்
யமுனையின் கரையில்
மரத்தின் கிளையில்,
நிகழும் நிகழ்வுகள்
கண்ணன் ராதையின்
காதல் விளையாட்டுக்கள்
அரிதினும் அரியது;

கல்விக் கடவுள் சரஸ்வதியின்
கருணையாலும்,
கடவுள் லக்ஷ்மியின்
கடாட்சத்தாலும்
காவியமாக்கப்பட்டது
கவி ஜெயதேவரால்,
கீதா கோவிந்தமென்ற இந்த நூல்.

No comments:

Post a Comment