Wednesday, August 31, 2011

மதுராஷ்டகம் - வல்லபாச்சர்யா - 2 of 2

கரணம் மதுரம் தரணம் மதுரம்
ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம் !
வமிதம் மதுரம் ஷமிதம் மதுரம்
மதுராதிபதேர் அகிலம் மதுரம் !! 5 !!


கிருஷ்ணா,
நீ செய்பவைகள் இனிமை,
நீரில் நீ மிதப்பது இனிமை,
உன் திருட்டுத்தனம் இனிமை,
உன்னை என்னிக்கிடப்பது இனிமை,
நீ பேசினால் இனிமை,
உன் அமைதி இனிமை,
இனிமைகளின் அரசனே, உன்
எல்லாமே இனிமை;

குஞ்சா மதுரா மாலா மதுரா
யமுனா மதுரா வீச்சி மதுரா !
சலீலம் மதுரம் கமலம் மதுரம்
மதுராதிபதேர் அகிலம் மதுரம் !! 6 !!


உன் குஞ்சலம் அழகு,
மாலை அழகு,
யமுனை நதி அழகு,
அந்த நதியில் ஆடும் அலைகள் அழகு,
நதியின் நீர் அழகு,
நீரில் மிதக்கும் தாமரை அழகு,
அழகுக்கெல்லாம் அரசனே, உன்னால்
எல்லாமே அழகு;

கோபி மதுரா லீலா மதுரா
யுக்தம் மதுரம் புக்தம் மதுரம் !
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம்
மதுராதிபதேர் அகிலம் மதுரம் !! 7 !!


கிருஷ்ணனோடு ஆடும் கோபியரெல்லாம் அழகு,
அங்கு அரங்கேறும் லீலைகலெல்லாம் அழகு,
கிருஷ்ணனோடு அவர்கள் ஐக்கியமாதல் அழகு,
அவர்கள் அடையும் ஆனந்தம் அழகு,
அவர்களைக் காண்பது அழகு,
அவர்களின் பணிவு அழகு,
அழகுக்கெல்லாம் அரசனே, உன்னை
அடைந்தோர் எல்லோரும் அழகு;

கோபா மதுரா காவோ மதுரா
யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா !
தழிதம் மதுரா பழிதம் மதுரா
மதுராதிபதேர் அகிலம் மதுரம் !! 8 !!


அவனோடிருக்கும் கோபர்கள் இனிமை,
அவர்தம் கன்றுகள் இனிமை
கன்றுகளைக் காக்கும் அந்தக் கொம்பு இனிமை
அவர்களின் பிறப்பு இனிமை
அவர்கள் பழித்து விளையாடும் ஆட்டம் இனிமை
இனிமைகளின் அரசனே, உன்னால்
எல்லாமே இனிமை;

No comments:

Post a Comment