தீபாவளி
தித்திக்கும் தீபாவளித் திருநாள்; திக்கெட்டும் கொண்டாடிக் குதுகளிக்கும் பெருநாள்; தேக்கி வைத்தப் பணம் தீக்கு இரையாவதைப் பார்த்துத் திணராது சிரித்து மகிழ்வது இத் திருநாளில் மட்டும் தான்; விடிகாலை விழித்து வெந்நீரில் குளித்துப் புத்தாடை உடுத்திக் கொண்டாடி மகிழ்வோம்; பெற்றோரை வணங்கி, பெரியோரை மதித்து, சிறியோரை வாழ்த்தி, பரிசுகள் பரிமாறிச் சிறப்பாய்க் கொண்டாடுவோம்; இனிப்பு உண்போம், இல்லாதாற்குக் கொடுத்து மகிழ்வோம்; நம் பழைய உடைகள் பலருக்குப் புதிய உடைகளாகும் உண்மையை உணர்வோம்; சுத்தமான தீபாவளி சத்தமில்லாத தீபாவளியே எனச் சத்தமாகச் சொல்வோம்; புகை சூழ்வதை விடப் புன்னகை சொல்வதே நன்று என்று உணர்வோம்; | கேப் வெடிக்கட்டும், குழந்தைகள் கை தட்டிச் சிரிக்கட்டும்; சங்கு சக்கரம் சுற்றட்டும், சண்டை சச்சரவுகள் ஒழியட்டும்; கொஞ்சமாய்ப் பாம்பு மாத்திரைகள் எரியட்டும்; கொஞ்சம் கூட மிச்சமில்லாது பாவ காரியங்கள் ஒழியட்டும்; தீபாவளியில் மட்டும் அணுகுண்டுகள் வெடிக்கட்டும் (சத்தமில்லாது); தீபாவளிக்காக மட்டுமே துப்பாக்கி விற்பனை; திசை மாறிப்பாயும் ராக்கெட் இத் திருநாளில் மட்டுமே; வான வேடிக்கையின் விற்பனையை விட வாழ்த்து அட்டைகளின் விற்பனை அதிகரிக்கட்டும்; தொலைக்காட்சியில் தொலைந்து போகாது தோழர் தோழியரைத் தொடர்பு கொண்டு தொல்லை தருவோம் தவறில்லை; தீய வழி ஒழியட்டும், தீபாவளி வாழட்டும். வாழ்த்துக்கள் ! வாழ்க பல்லாண்டு ! |
No comments:
Post a Comment