Friday, August 1, 2014

ஒரு காலம்



தூளியில் தூங்கிக் கிடந்தது ஒருகாலம்
துக்கமேதுமின்றி துள்ளித் திருந்தது ஒருகாலம்
தூண்மறைவில் மறைந்து நின்று பேசியது ஒருகாலம்
தூரத்தில் நின்று ஏக்கத்தோடு பார்த்தது ஒருகாலம்
தூற்றுவாரையெல்லாம் துச்சமாய் மதித்து
தன் வழி சென்றது ஒருகாலம்,

சிவனையெண்ணி
சிவோஹம் எனச்சொல்லி
சிவபதம் கிட்ட
சிந்தித்திருப்பது இக்காலம்;  

Tuesday, July 8, 2014

அவள்



பல சுவைகள் நிறைந்த
பருக முடியா பஞ்சாமிர்தம்;

வீட்டில் அமர்ந்திருக்கும்
வாய் திறந்து பேசும் விக்கிரகம்;

புவியில் மிதக்கும்
ஆனால் புக முடியா சொர்க்கம்;

அனுபவிக்க முடியாத சோபிதம்;
பறித்து முகர முடியாத கமலம்;

காண முடியா நர்த்தனம்;
கேட்க முடியா கீர்த்தனம்;
நாசி உணர முடியா சுகந்தம்;

எங்கோ மறைவில் இருக்கும் ஏகாந்தம், அவளை  
எண்ணிக் கிடப்பதிலே இருக்குது பேரானந்தம்;

Tuesday, July 1, 2014

பாவங்கள்



பிறக்க வைத்தது நீ,
வளர வைத்தது நீ,
நான்கு கலைகளை நன்கு கற்க வைத்தது நீ,
வாழ்க்கையில் அலைய விட்டு,
அனுபவிக்க வைத்து,
பின் அழ வைப்பது - எல்லாம் நீ;

இதில்
என் பாவங்கள் என்பது
எங்கிருந்து வருகிறது, இறைவா?