A lovely kirtan by Pujya Indrajit Upadhyay and its translation in Tamiz ... as far as I understand.
ஹே
ராதே, அழகுக்கெல்லாம் அழகே,
உன்
கருணைக்காகக் காத்திருக்கும் அபலை நான்
உன்
கண்ணனை ஆராதித்து ஆனந்திப்பவள் நான்,
கேளேன்
என் குறையை,
உன்னால்
மட்டுமே முடியும், மாற்று என் நிலையை;
தரிசனம்
தராது
தவிக்கவைக்கிறான்
தாமோதரன்.
இங்கு
இந்த வனத்தில் இருப்பான் இல்லையெனில்
அந்த
இடத்தில் இருப்பான் என்று எண்ணினேன்
காணலாம்
கண்டு பேசிப் பழகலாம் என்று கனவு கொண்டேன்
இதுவரை
காண முடியாது தேடித் தவிக்கிறேன்
துன்பக்கடலில்
தத்தளிக்கிறேன்
தரிசனம்
தராது
தவிக்கவைக்கிறான்
தாமோதரன்.
நேச
மொழி பேசினான்
பேதை
என்நெஞ்சில் பேராசை வளர்த்தான்
ஆசையெல்லாம்
நிராசையாகுமாறு
எங்கோ
மறைந்து நின்று
எனை
வதைத்து ரசிக்கிறான்
தரிசனம்
தராது
தவிக்கவைக்கிறான்
தாமோதரன்.
அன்பு
வைத்த என்னை
அவன்
சோதிக்கிறான்
அழ
வைத்துப் பார்த்து ரசிக்கிறான்
அருகில்
வந்து அளவாடுகிறான் சிலசமயம்
எட்டி
நின்று ஏங்க வைக்கிறான் சிலசமயம்
இதுவரை
கையில் அகப்படாது
காணவும் முடியாது
…
தரிசனம்
தராது
தவிக்கவைக்கிறான்
தாமோதரன்.
என்னவன்
அவன் என்று
எல்லோரும்
சொல்லக் கேட்கிறேன்
அவனையே
எண்ணி
பகல்
இரவெல்லாம் அழுது கிடக்கிறேன்
இந்த
உலகை மறந்தேன்
உறவை
எல்லாம் துறந்தேன்
கண்ணனே
கதி என்றுக் கிடக்கேன்
என்னை
அவன் ஏறெடுத்தும் பார்க்க மறுக்கிறான்
இனி
என்ன செய்வது
என்று ஏதும்
தெரியாது .....
தரிசனம்
தராது
தவிக்கவைக்கிறான்
தாமோதரன்.
No comments:
Post a Comment