Thursday, November 17, 2016

இரயில் பயணம்



'டீ ... டீ ... டீ
டீ குடிப்போ, ண்ணா சூடா இருக்காண்ணா' என்று நீ கேட்பதும்,

'இப்போத்தானே குடிச்சோ' என்றால்

'அது காஃபி ... 2 குடுங்கண்ணா ... காசு அவரு கொடுப்பாரு' என்று எனைக் கோர்த்துவிடுவதும்,


அடுத்த ஐந்து நிமிடத்தில்

'ஹா ... வடை ... மசால் வடை எனக்கு ரொம்பப் பிடிக்கும்' என்று நீ சொல்ல,

'சமோசாவுக்கும் இதேதானே சொன்னே ?' என்றுநான் வினவ,

'இப்போ ஒரு பேச்சு அப்போ ஒரு பேச்சு என்கிட்டே கெடையவே கெடையாது' என்று சொல்லிக்கொண்டே

'ரெண்டு குடுங்க, சட்னில்லா வேண்டா' என்று சொல்லிவிட்டு,

எனைப்பார்த்து நாக்கு நீட்டி, முகத்தைச் சுளித்து 'நல்லாயிருக்காது' என உணர்த்துவதும்,


'வாவ் ... இங்கே புளி சாதம் நல்லாயிருக்கு ... 2 வாங்கிட்டுவாயே ... ப்ளீளீளீஸ் ' என்ற கொஞ்சல் பேச்சும்,

'இது என்ன ஸ்டேஷன் ?' என்று கேட்டால்

'யாருக்குத் தெரியும், விக்குதே வாங்குவோ' என்று சொல்லிக் கண்ணடிப்பதும்,



'பேல் … சாப்ட்டிருக்கியா?' என்று நீ கேட்பதும்,

"'இல்லே' ன்னா 'சாப்டுப்பாரு'ன்னு சொல்லுவே, 'சாப்டுருக்கே' ன்னு சொன்னா 'நல்லாருக்கும்ல' ன்னு சொல்லுவே'" என்று நான் சொல்ல,

'1 பேல் குடுங்க, லெமன் வேணா, மாங்கா கொஞ்சம் அதிகமாப்போட்டு ... நண்பா ஒரு பத்து குடுத்தாரு' என்று நீ சொல்வதும்,   

'பேல் … 15 ங்க' என்று அவர் சொல்ல,

'15 ன்னா வேணாங்க' என்று தின்றுக்கொண்டே நீ பேரம் பேசுவதும்


இரயிலில் பயணிக்கப் பிடிக்க
இத்தனைக் காரணங்கள் இருந்தாலும்,
இன்னொரு முக்கியக் காரணம்

'AC அதிகமாயிருக்குல்ல' என்று சொல்லிக்கொண்டே
என் போர்வையில் நீ புகுந்துக்கொள்வாயே,

அதுதான் ஹைலைட்.



No comments:

Post a Comment