Sunday, November 27, 2016

மட நெஞ்சம்


அடச்சீ அஞ்சி மணிதான் ஆவுதா இன்னும் ன்னு டென்சன்
அடக்கடவுளே ஏழு மணி ஆயிடுச்சே ன்னு டென்சன்
சுடுதண்ணி வரலியேன்னு டென்சன்
தோசை பெருசா இருந்தா ஒரு டென்சன்
காஃபி சூடா இல்லேன்னாடென்சன்
லிஃப்டு வர லேட்டாச்சுன்னா டென்சன்
காலைலேயே டிராஃபிக் ஜாம் ஆச்சுன்னா டென்சன்
பார்க்கிங் கெடைக்கலேன்னா டென்சன்
இவ்ளோ டென்சனுக்கு நடுவுல ஆபிசுக்கு ஓடி,
'நேத்து நாம போட்ட போஸ்டுக்கு தமிழ்நாடே கதறிருக்கும்'ன்னு நெனச்சிக்கிட்டே FB கனெக்ட் பண்ணா,
ஒரு நாயும் கண்டுக்கலியே ன்னு டென்சன்
ஒரு பக்கியும் லைக் கம்மெண்ட் போடலியே ன்னு டென்சன்,
ஏறியிற தீயிலே எண்ணையை ஊத்துற மாதிரி
தமிழ் தெரியாத ஒருத்தே லைக்கு போட்டதைப் பார்த்து நொம்ப டென்சன்
அவனுக்கு இருக்கும் ஆர்வம்,
ஏன் மத்த நண்பர்கட்கு இல்லேன்னு நெனச்சி இன்னும் டென்சன்,
'நீயெல்லா உயிரோட இருக்கணுமா? ' ன்னு
ரெஸ்ட் ரூம் கண்ணாடி முன்னாடி
விரலை நீட்டி பேசிக்கிட்டு இருக்கும்போது
இன்னொருத்த நுழைய
'இவனுக்குத்தா தமிழ் தெரியாதே' ன்னு மனசு சமாதானம் சொல்லி,
'நாளைக்கு என்ன போஸ்ட் போடுவோம்னு' சிந்திக்குதே,
'அட மட நெஞ்சே, என்ன சொல்ல உன்னை ?'

Thursday, November 17, 2016

இரயில் பயணம்



'டீ ... டீ ... டீ
டீ குடிப்போ, ண்ணா சூடா இருக்காண்ணா' என்று நீ கேட்பதும்,

'இப்போத்தானே குடிச்சோ' என்றால்

'அது காஃபி ... 2 குடுங்கண்ணா ... காசு அவரு கொடுப்பாரு' என்று எனைக் கோர்த்துவிடுவதும்,


அடுத்த ஐந்து நிமிடத்தில்

'ஹா ... வடை ... மசால் வடை எனக்கு ரொம்பப் பிடிக்கும்' என்று நீ சொல்ல,

'சமோசாவுக்கும் இதேதானே சொன்னே ?' என்றுநான் வினவ,

'இப்போ ஒரு பேச்சு அப்போ ஒரு பேச்சு என்கிட்டே கெடையவே கெடையாது' என்று சொல்லிக்கொண்டே

'ரெண்டு குடுங்க, சட்னில்லா வேண்டா' என்று சொல்லிவிட்டு,

எனைப்பார்த்து நாக்கு நீட்டி, முகத்தைச் சுளித்து 'நல்லாயிருக்காது' என உணர்த்துவதும்,


'வாவ் ... இங்கே புளி சாதம் நல்லாயிருக்கு ... 2 வாங்கிட்டுவாயே ... ப்ளீளீளீஸ் ' என்ற கொஞ்சல் பேச்சும்,

'இது என்ன ஸ்டேஷன் ?' என்று கேட்டால்

'யாருக்குத் தெரியும், விக்குதே வாங்குவோ' என்று சொல்லிக் கண்ணடிப்பதும்,



'பேல் … சாப்ட்டிருக்கியா?' என்று நீ கேட்பதும்,

"'இல்லே' ன்னா 'சாப்டுப்பாரு'ன்னு சொல்லுவே, 'சாப்டுருக்கே' ன்னு சொன்னா 'நல்லாருக்கும்ல' ன்னு சொல்லுவே'" என்று நான் சொல்ல,

'1 பேல் குடுங்க, லெமன் வேணா, மாங்கா கொஞ்சம் அதிகமாப்போட்டு ... நண்பா ஒரு பத்து குடுத்தாரு' என்று நீ சொல்வதும்,   

'பேல் … 15 ங்க' என்று அவர் சொல்ல,

'15 ன்னா வேணாங்க' என்று தின்றுக்கொண்டே நீ பேரம் பேசுவதும்


இரயிலில் பயணிக்கப் பிடிக்க
இத்தனைக் காரணங்கள் இருந்தாலும்,
இன்னொரு முக்கியக் காரணம்

'AC அதிகமாயிருக்குல்ல' என்று சொல்லிக்கொண்டே
என் போர்வையில் நீ புகுந்துக்கொள்வாயே,

அதுதான் ஹைலைட்.



Friday, November 11, 2016

மனசாட்சி



காலைல கண்முழிச்சு
கைப்பேசி ல வாட்ஸாப் சாட் லா நெரப்பிக்கிட்டு
கடமையாற்றக் கெளம்பி
கரிக்டா ஒன்பது மணிக்கு சீட்ல ஒக்காந்து
கம்ப்யுட்டர் தொறந்து
மெயில் லா படிச்சிட்டு
வாட்ஸாப் பாத்து சிரிச்சிட்டு
ஓசி ல வச்ச காபி, டீ, ஹார்லிக்ஸ குடிச்சிட்டு (ஏதாச்சு ஒண்ணுதாங்க)
சாப்பாட்டு நேரம் ஆகும் வரை
அந்த சைட் இந்த சைட் ன்னு (வெப்சைட்ட சொன்னேங்க) பாத்துட்டு
ஒலக நியூஸ் ல படம் பாத்துட்டு
சாப்பாடு முடிச்சி
லைட்டா முழிச்சிக்கிட்டே கண்ணை மூடி
தூக்கத்த தொரத்த பாடுபட்டு
மறுபடி வாட்ஸாப் கனெக்ட் பண்ணி
உருப்படியா எதுவு வந்திருக்காதுன்னு தெரிஞ்சு
மறுபடி ஒருக்கா செக் பண்ணிட்டு
'ப்ரீயா தந்தா பினாயிலையு குடிப்பியே'ன்னு மொறைக்குற
பாண்ட்ரி பையனை கண்டுக்காம
இன்னு கொஞ்சம் காபி, டீ, ஹார்லிக்ஸ குடிச்சி வச்சி (இப்போவு ஏதாச்சு ஒண்ணுதாங்க)
போறவர்றவங்களை பாத்துக்கிட்டே
ஒலக விசயம் அலசி,
மறுபடி அந்த சைட் இந்த சைட் ன்னு (இப்பவு வெப்சைட்ட தா சொன்னேங்க) பாத்துட்டு
நேரம் சரியாத்தா ஓடுதா ன்னு சந்தேகம் வந்து
வேர்ல்ட் டைமோட ஒருதபா வெரிஃபை பண்ணிட்டு
ஆறுமணி ஆகையில
ஒருவேளையு இன்னிக்கி பண்ணலியேன்னு கவலையே படாம
நேத்து என்ன கிழிச்சோம்னு சமாதானம் சொல்லிக்கிட்டு,
அவசரமா போகணும்னு கெளம்பி
ஆறஅமர வீட்டுக்குப்போயி உட்கார்ந்தா
'என்னாங்க டயர்டா இருக்கீங்களே, வேலை அதிகமா ?' ன்னு
பொண்டாட்டி கேக்கும்போது,
ஒரு பயம் வரும் பாருங்க ...
இதுக்கு பேருதா மனசாட்சி யா ?